/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தந்தையை கொன்ற நபரை குத்திக்கொலை செய்த மகன்
/
தந்தையை கொன்ற நபரை குத்திக்கொலை செய்த மகன்
ADDED : ஆக 27, 2025 03:11 AM
குலசேகரன்பட்டினம்:குலசேகரன்பட்டினம் அருகே தந்தையை கொன்ற நபரை, குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், சிறுநாடார்குடியிருப்பு கீழ தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி, 66. விவசாய தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, தெருவில் சென்ற துரைப்பாண்டியை, வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி தப்பினார்.
அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். புகாரில் குலசேகரன்பட்டினம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம், 26, என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த ஆண்டு, நாடார்குடியிருப்பு விழாவில், சிவலிங்கத்தின் தந்தை செந்தில்குமார் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக துரைப்பாண்டி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வந்தவரை பழிக்குப்பழியாக சிவலிங்கம் குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.