தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பாதை தொடர்பாக தகராறு இரு தரப்பினர் கல்வீசி தாக்குதல்

 பாதை தொடர்பாக தகராறு இரு தரப்பினர் கல்வீசி தாக்குதல்

 பாதை தொடர்பாக தகராறு இரு தரப்பினர் கல்வீசி தாக்குதல்


ADDED : ஏப் 19, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 03:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: பாதை தகராறில் கிராமத்தினரும், இலங்கை தமிழர்களும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், குளத்துவாய்ப்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.

இந்த முகாம் வழியாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தினர், தங்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த பாதையை பயன்படுத்துவது குறித்து, கிராமத்தினருக்கும், முகாமில் உள்ளவர்களுக்கும், 2025ல் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், பாதை பிரச்னையால், விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுவதால், தேர்தலை புறக்கணிப்பதாக கிராமத்தினர் அறிவித்தனர்.

இதுதொடர்பாக வருவாய் துறையினர், கிராமத்தினருடன் பேச்சு நடத்தினர். இதற்கிடையே, பிரச்னைக்குரிய பாதையில் சாலையை சீரமைக்க, மண் கொட்டப்பட்டதற்கு, முகாமில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கிராமத்தினருக்கும், முகாமில் உள்ளவர்களுக்கும், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.

திடீரென போலீசார் முன்னிலையில், ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அங்கு போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us