ADDED : மார் 23, 2026 07:43 PM
துாத்துக்குடி : நண்பர்களுடன் கிணற்றில் குளித்து கொண்டிருந்த பிளஸ் 2 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாரியம்மன்கோவில்தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மகன் மனோஜ், 17. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை என்பதால் நேற்று மாலையில் நண்பர்கள் சிலருடன் லிங்கம்பட்டி - திட்டக்குளம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளித்து உள்ளனர்.நீண்ட நேரமாகியும் மனோஜ் வெளியே வராததால், அச்சமடைந்த நண்பர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினரின் சிறிது நேர தேடலுக்குப் பின் மனோஜ் சடலமாக மீட்டகப்பட்டார்.
நாலாட்டின்புதுார் போலீசார் மனோஜ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் இறப்பு குறித்து போலீசார் லழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
