ADDED : ஆக 12, 2026 09:59 PM
துாத்துக்குடி : மொபைல் போனை அதிக நேரம் பார்க்க கூடாது என தாய் திட்டயதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, திருப்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த சந்திரமோகன்- ஜான்சி ராணி தம்பதியின் மகள் இலக்கியா ஸ்ரீநிதி, 22.
நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த இலக்கியா ஸ்ரீநிதி அதிக நேரமாக மொபைல் போனை பார்த்து கொண்டிருந்ததால், தாய் ஜான்சிராணி கண்டித்துள்ளார்.
மனமுடைந்த இலக்கியா ஸ்ரீநிதி வீட்டில் தனியாக இருந்தபோது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயக்கமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இலக்கியா ஸ்ரீநிதி நேற்று உயிரிழந்தார். ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
