தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்


ADDED : மார் 09, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி : ஏரல் அருகே, தந்தை இறந்த துக்கத்திலும், பிளஸ் 2 மாணவர் ஒருவர், வேதியல் தேர்வு நேற்று எழுதினார்.

துாத்துக்குடி மாவட்டம், சிறுதொண்டநல்லுாரைச் சேர்ந்த முகமது வாகித், 43, என்பவர், நேற்று முன்தினம், உறவினர் வீட்டிற்கு சென்றபோது, பைக்கில் இருந்து தவறி, கீழே விழுந்தார். இதையடுத்து, திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் நேற்று செய்தனர். முகமது வாகித்தின் மகன் அஜிஸ், 17, என்பவர், ஆத்துாரில் உள்ள, சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வருகிறார்.வேதியல் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், தந்தை உயிரிழந்ததால், அஜிஸை பள்ளிக்கு அனுப்ப உறவினர்கள் மறுத்தனர். தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியர் ரஞ்சித், மாணவரின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, தேர்வு எழுத அனுப்பி வைக்குமாறு உறவினர்களிடம் பேசினார்.

தந்தை இறந்த துக்கத்திலும், தேர்வெழுதிய மாணவர் அஜிஸை, அவரின் வீட்டிற்கு தலைமையாசிரியர் ரஞ்சித், தன் காரிலேயே அழைத்துச் சென்றார். இதையடுத்து, முகமது வாகித்தின் இறுதி சடங்கு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us