sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு

/

பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு

பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு

பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு


ADDED : ஜூன் 17, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே அமைந்துள்ள கொல்லம்பரம்பு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

கொல்லம்பரம்பு கிராமத்தில் இருந்து மாணவர்கள் பள்ளி செல்ல வசதியாக போதிய பஸ் வசதி இல்லை. இப்பகுதி வழியாக இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் ஜூன் 5 முதல் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பஸ் வசதி கேட்டு மாணவ - மாணவியர் சீருடையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களுடன் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இருந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'பஸ் வசதி இல்லாததால், 7 கி.மீ., நடந்து பள்ளி செல்ல வேண்டியுள்ளது. ஆட்டோ, வேன் ஏற்பாடு செய்தால் மாதம் 1,000 ரூபாய் செலவாகிறது. கிராம மக்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். இதனால் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்' என, கூறியிருந்தனர்.






      Dinamalar
      Follow us