/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாணவிகளுக்கு மது வாங்கி தந்த ஆசிரியர் குண்டாசில் கைது
/
மாணவிகளுக்கு மது வாங்கி தந்த ஆசிரியர் குண்டாசில் கைது
மாணவிகளுக்கு மது வாங்கி தந்த ஆசிரியர் குண்டாசில் கைது
மாணவிகளுக்கு மது வாங்கி தந்த ஆசிரியர் குண்டாசில் கைது
ADDED : டிச 04, 2024 12:40 AM

திருச்செந்துார்:உடன்குடி பள்ளி மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்த பள்ளி விளையாட்டு ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் 42;
சமீபத்தில் மாணவிகளை துாத்துக்குடிக்கு விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற இடத்தில் விடுதியில் தங்கியிருந்த போது மதுவாங்கி கொடுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். திருச்செந்துார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையில் பொன்சிங்கை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கே.இளம் பகவத் நேற்று உத்தரவிட்டார்.