ADDED : அக் 23, 2026 04:34 AM
துாத்துக்குடி:
கோவில் காவலாளியை அரிவாளால் வெட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த துர்க்கைசாமி, 51, என்பவர் நவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோவிலில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
வழக்கம்போல, நேற்று மாலை அவர் பணியில் இருந்தபோது, வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்து தகராறு செய்துள்ளார். திடீரென துர்க்கைசாமியை அரிவாளால் வெட்டி விட்டு, மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் துர்க்கைசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசை தசராவிற்கு மாலை அணிந்திருந்த நபர் ஒருவர், சில நாட்களுக்கு முன் கோவில் வளாகத்தில் தங்கியிருந்ததை துர்க்கைசாமி அப்புறப்படுத்தியதால், முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
