தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கட்டுப்பாட்டை இழந்த பஸ் கோவில் சுவரில் மோதியது

கட்டுப்பாட்டை இழந்த பஸ் கோவில் சுவரில் மோதியது

கட்டுப்பாட்டை இழந்த பஸ் கோவில் சுவரில் மோதியது


ADDED : நவ 09, 2024 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 02:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் இருந்து கோவில்பட்டி வழியாக தென்காசிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று மாலை, 3:20 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

லட்சுமண பெருமாள், 45, என்பவர் அந்த பஸ்சை ஓட்டினார். கோவில்பட்டி புதுரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

புதுரோடு இறக்கத்தில் உள்ள முச்சந்தி விநாயகர் கோவில் வாசலில் மோதி நின்றது.

இதில், பயணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனினும், உயிர்சேதம் ஏற்படவில்லை. கோவில் முகப்பில் இருந்த வாசல் கம்பியை இடித்து, பஸ் நின்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து காரணமாக புதுரோடு, ரயில் நிலையம் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்துக்குள்ளான பஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.

திடீரென பிரேக் பிடிக்காததே விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us