/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கொலை கோவில்பட்டி அருகே கொடூரம்
/
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கொலை கோவில்பட்டி அருகே கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கொலை கோவில்பட்டி அருகே கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கொலை கோவில்பட்டி அருகே கொடூரம்
ADDED : டிச 11, 2024 02:27 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திக் முருகன் --- பாலசுந்தரி தம்பதியின் இரண்டாவது மகன் கருப்பசாமி, 11; அப்பகுதி அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
உடல் நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கார்த்திக் முருகனும், பாலசுந்தரியும் வேலைக்கு சென்றுவிட்டதால், கருப்பசாமியை, கார்த்திக் முருகனின் தாயை பார்த்துக் கொள்ளுமாறு கூறி உள்ளனர்.
அவர் வீட்டுக்கு சென்றபோது, சிறுவன் இல்லாததைக் கண்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். கார்த்திக் முருகன், உறவினர்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுவன் ஒன்றை சவரன் செயின், ஒரு கிராம் மோதிரம் அணிந்திருந்ததால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என, தகவல் பரவியது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கார்த்திக் முருகன் புகார் அளித்தார்.
போலீசார் அப்பகுதி 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போதிலும் எந்த விபரமும் கிடைக்கவில்லை.
மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடி வந்த நிலையில், நேற்று காலை பக்கத்து வீட்டு மாடியில் கருப்பசாமி இறந்து கிடந்தான்.
சம்பவ இடத்தில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி., ஜெகநாதன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் அப்பகுதிக்கு சம்பந்தமில்லாத பலரும் வந்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
கருப்பசாமியின் உடல் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சிறுவனின் வாய் மற்றும் ஆசனவாய் பகுதியில் லேசான காயம் இருப்பதாக போலீசாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அறிக்கை வந்த பிறகே முழு விபரம் தெரியவரும்.
கொலை நடந்த பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. சிறுவன் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில், போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.