/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் 5 நாட்களாக உள்வாங்கி காணப்படும் கடல்
/
திருச்செந்துாரில் 5 நாட்களாக உள்வாங்கி காணப்படும் கடல்
திருச்செந்துாரில் 5 நாட்களாக உள்வாங்கி காணப்படும் கடல்
திருச்செந்துாரில் 5 நாட்களாக உள்வாங்கி காணப்படும் கடல்
ADDED : டிச 01, 2024 02:50 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடுவது வழக்கம். தொடர்ந்து, நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்வது உண்டு. திருவிழா நாட்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வழக்கமாக கோவில் கடல் பகுதியில், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சில அடி துாரம் உள்வாங்கி காணப்படும். ஆனால், தற்போது, நவ., 26 முதல் தொடர்ந்து, ஐந்து நாட்களாக கடல் உள்வாங்கி காணப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக கடல் உள்வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
சில நாட்களாக குறிப்பிட்ட நேரம் மட்டுமே உள்வாங்கி காணப்பட்ட கடல், நேற்று, 100 அடி அளவுக்கு உள்வாங்கி காணப்பட்டது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் துாரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிந்து காணப்படுகின்றன.
எளிதில் வழுக்கும் வகையில் அதிக பாசிகள் உள்ள போதிலும், ஆபத்தை உணராமல் அதன்மேல் நின்றபடி பக்தர்கள் சிலர் மொபைல் போனில் செல்பி எடுத்து வருகின்றனர். அவர்களை போலீசாரும், கோவில் கடலோர பாதுகாப்பு ஊழியர்களும் எச்சரித்து அப்புறப்படுத்தினர்.

