/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பங்க் உரிமையாளரை கடத்திய இருவரை விரட்டி பிடித்த எஸ்.ஐ.,
/
பங்க் உரிமையாளரை கடத்திய இருவரை விரட்டி பிடித்த எஸ்.ஐ.,
பங்க் உரிமையாளரை கடத்திய இருவரை விரட்டி பிடித்த எஸ்.ஐ.,
பங்க் உரிமையாளரை கடத்திய இருவரை விரட்டி பிடித்த எஸ்.ஐ.,
ADDED : செப் 20, 2024 11:45 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். நாலாட்டின்புதுார் அருகே பெட்ரோல் பங்க் நடத்துகிறார். பெட்ரோல் பங்கிற்கு நாலாட்டின்புதுார் ரோட்டில் டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இரு கார்களில் வந்தவர்கள், அவரை டூ - வீலரில் இருந்து இறக்கி, வலுக்கட்டாயமாக காரில் கடத்தினர். இன்னொரு காரில், ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்தனர்.
தற்செயலாக அவ்வழியே வந்த நாலாட்டின்புதுார் எஸ்.ஐ., அருள்சாம்ராஜ், இதைப் பார்த்து, அக்காரை தன் டூ - வீலரில் பின் தொடர்ந்து இடைச்செவல் அருகே வழிமறித்து நிறுத்தினார்.
போலீசை பார்த்ததும் கார் டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். முத்துக்குமாரை மீட்டவர், காரில் இருந்த திருநெல்வேலியை சேர்ந்த அய்யப்பன், துாத்துக்குடியை சேர்ந்த செல்வகுமாரை பிடித்தார். மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல், போலீசை பார்த்ததும் தப்பியது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 'இன்னோவா' கார், டி.என்.09 - பி.டி., 1234 பதிவெண் கொண்டது. காரில் முன்புறம் பா.ஜ., கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. காரில், தி.மு.க., பார்லிமென்ட் மேலவை உறுப்பினர் முகமது அப்துல்லா என்ற பெயரில், பார்லிமென்ட் அனுமதிக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
காரில் இருந்து கைத்துப்பாக்கி, வாக்கிடாக்கி கருவி பறிமுதல் செய்யப்பட்டன.
மீட்கப்பட்ட முத்துக்குமார் கூறுகையில், “என்னுடன் பெட்ரோல் பங்க் நடத்திய கழுகுமலையை சேர்ந்த உறவினர் ராமகிருஷ்ணன் துாண்டுதலில், கடத்தல் நடந்திருக்கலாம்,” என்றார். கடத்தலில் ஈடுபட்டு தப்பிய மேலும் ஏழு பேரை போலீசார் தேடுகின்றனர்.