/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நிலப்பிரச்னையில் அண்ணன் மனைவி கொலை வாலிபர் போலீசில் சரண்
/
நிலப்பிரச்னையில் அண்ணன் மனைவி கொலை வாலிபர் போலீசில் சரண்
நிலப்பிரச்னையில் அண்ணன் மனைவி கொலை வாலிபர் போலீசில் சரண்
நிலப்பிரச்னையில் அண்ணன் மனைவி கொலை வாலிபர் போலீசில் சரண்
ADDED : மார் 15, 2024 01:43 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி 35. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார்.
எனவே சின்னமணி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் குழந்தைகளுடன் வசித்தார். சின்னமணிக்கும் வைரமுத்துவின் தம்பி ராஜேஷ் கண்ணனுக்கும் இடையே குடும்ப நிலப்பிரச்னை இருந்தது.
நேற்று காலை சின்னமணி எப்போதும்வென்றான் சென்றிருந்தார். மீண்டும் புதுக்கோட்டை வருவதற்கு பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் தகராறு செய்து சின்னமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் எப்போதும்வென்றான் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.