/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
/
திருச்செந்துார் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருச்செந்துார் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருச்செந்துார் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED : பிப் 15, 2024 02:55 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நேற்று காலை கொடியேற்றுத்துடன் துவங்கியது.
முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 3:00 மணிக்கு கொடிபட்டம் வெள்ளி பல்லக்கில் கொண்டுவரப்பட்டது. 4:52 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பிப்., 20ம் தேதி மாலை 4:30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 21ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்., 23 காலை 6:30 மணிக்கு நடக்கிறது. 24ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

