/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தாமிரபரணி பாலத்தை துரத்தும் துயரம்; வெள்ள அரிப்பு சீரமைக்கப்படாத அவலம்
/
தாமிரபரணி பாலத்தை துரத்தும் துயரம்; வெள்ள அரிப்பு சீரமைக்கப்படாத அவலம்
தாமிரபரணி பாலத்தை துரத்தும் துயரம்; வெள்ள அரிப்பு சீரமைக்கப்படாத அவலம்
தாமிரபரணி பாலத்தை துரத்தும் துயரம்; வெள்ள அரிப்பு சீரமைக்கப்படாத அவலம்
ADDED : செப் 19, 2024 03:35 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி -- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வல்லநாடு பகுதியில், 324 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு, கடந்த 2012ல் பயன்பாட்டுக்கு வந்தது. கனரக வாகனங்களின் அதிகரிப்பால், 2017ல் பாலத்தின் நடுவே, 'கான்கிரீட்' பெயர்ந்து, பெரிய பள்ளம் விழுந்தது.
இதுவரை, 11 முறை அப்பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர், பல முறை ஆய்வு செய்து சீரமைத்துள்ளனர்.
இதற்காக, 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், சீரமைப்பு பணிகளை, அதிகாரிகள் சரிவரச் செய்யவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த டிச., 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில், வல்லநாடு பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இரண்டு துாண்களை சுற்றி, அரிப்பு ஏற்பட்டு அடிப்பகுதி, 'கான்கிரீட்' வெளியே தெரிகிறது.
இப்பகுதியில் பணிகள் மேற்கொண்ட அதிகாரிகள், முழுமையாக செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வல்லநாட்டில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஒருவழிப்பாதை பாலம் இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக தற்போது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வந்த இந்த பாலத்தில் அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது.
ஆற்றின் கீழ் பகுதியில், துாண்களை சுற்றி ஏற்பட்ட அரிப்பு, 10 மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

