/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
500 கிராம் கஞ்சா பறிமுதல் மாணவர்கள் மூவர் சிக்கினர்
/
500 கிராம் கஞ்சா பறிமுதல் மாணவர்கள் மூவர் சிக்கினர்
500 கிராம் கஞ்சா பறிமுதல் மாணவர்கள் மூவர் சிக்கினர்
500 கிராம் கஞ்சா பறிமுதல் மாணவர்கள் மூவர் சிக்கினர்
ADDED : ஜன 03, 2025 11:32 PM
கோவில்பட்டி:துாத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், தனிப்படை போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபடுகின்றனர். கோவில்பட்டி, ராஜிவ்நகர் பகுதியில் சிலர் கஞ்சாவுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.ஐ., மணிமாறன் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் கையில் இருந்த பொட்டலங்களை வீசி தப்ப முயன்றனர்.
விசாரணையில், அவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், 22, மோகன்குமார், 19, செண்பககுமார், 19, என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைதான மூவரில் இருவர் சட்டக் கல்லுாரி மாணவர்கள். ஒருவர் இன்ஜி., கல்லுாரி மாணவர்.