/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கும் பணி: தக்கார் ஆய்வு

ADDED : செப் 23, 2024 08:10 PM

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுர கலசங்கள் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை தக்கார் அருள்முருகன் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இதோடு அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ராஜகோபுரத்தின் மேல் பகுதியில் உள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி ராஜகோபுரம் கீழ்பகுதியில் வைத்து புதுப்பிக்கும் மணிகள் நடந்து வருகிறது. கலசங்களை புதுப்பிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளை கோயில் தக்கார் அருள்முருகன் ஆய்வு மேற்கொண்டார்.