/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போதையில் சிகிச்சை: அரசு டாக்டர் சஸ்பெண்ட்
/
போதையில் சிகிச்சை: அரசு டாக்டர் சஸ்பெண்ட்
ADDED : மே 17, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்தபடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
துாத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் கண்ணன், 46. துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பொது மருத்துவம் பிரிவில் வேலைபார்த்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த டாக்டர் கண்ணன் குடிபோதையில் இருந்ததால் நோயாளிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, அரசு டாக்டர் கண்ணனிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக மருத்துவத் துறை இயக்குநர் சங்குமணி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.