/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துவக்கம் தொலைபேசி எண்கள் வெளியீடு
/
நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துவக்கம் தொலைபேசி எண்கள் வெளியீடு
நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துவக்கம் தொலைபேசி எண்கள் வெளியீடு
நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துவக்கம் தொலைபேசி எண்கள் வெளியீடு
ADDED : ஜூலை 24, 2011 01:19 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நில மோசடியைத் தடுப்பதற்காக தூத்துக்குடி எஸ்.பி.,அலுவலகத்தில் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெ.,பொறுப்பேற்றவுடன் நிலமோசடியை தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துவங்கப்பட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவ ட்ட எஸ்.பி.அலுவலகத்திலும் நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. துவக்கப்பட்ட நாள் முதல் 60க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தொலைபேசி எண்- 0461-2340585, கைபேசி எண்கள்- 9443455153, 9445497499. இந்த நம்பர்களில் நிலமோசடி தொடர்பாக பொதுமக்கள் புகார் கூறலாம். மேலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேற்கண்ட தொலைபேசி எண்ணைக் கொண்ட டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.