/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
/
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
ADDED : செப் 30, 2011 02:17 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் பொன் இனிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநகராட்சி குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதற்கு உடனடி முயற்சி மேற்கொள்வேன் என்று உறுதியளித்தார். தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக போட்டியிடும் பொன் இனிதா நேற்று தேர்தல் அதிகாரி மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது மனுவை மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முன்மொழிந்தனர். மாற்று வேட்பாளராக முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் சுரே ஷ்குமார், சுரேஷ், முன்னாள் துணைத் தலைவர் மனோஜ்குமார், வக்கீல் மோகன்தாஸ், கருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பொன் இனிதா நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி மாநகராட்சி பகுதியின் மேம்பாட்டிற்கு திமுக தலைவர் கருணாநிதி எவ்வளவோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்த வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி ஓட்டு கேட்போம். தூத்துக்குடி மாநகராட்சியில் முக்கிய பிரச்னையாக உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் வழங்குவதற்கு வேண்டிய முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படும்.இதே போல் சுகாதார வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக தீர்ப்பதற்கு வே ண்டிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர் தெரிவித்தார். . வேட்பாளர் பொன் இனிதாவிற்கு அசையும் சொத்து 41 லட்சத்து 49 ஆயிரத்து 865, அவரது கணவர் மாரியப்பன் பெயரில் 52 லட்சத்து 11 ஆயிரத்து 268 ரூபாயும். அசையும் சொ த்து வேட்பாளர் பெயரில் 40 லட்சம், அவரது கணவர் பெயரில் 2 கோடியே 20 லட்சம் இருப்பதாக சொத்து விபரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.