sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்

/

தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்

தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்

தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் இந்தாண்டு ரூ.2730 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்


ADDED : செப் 30, 2011 02:17 AM

Google News

ADDED : செப் 30, 2011 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூல ம் இந்தாண்டு 2730 கோ டி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கஸ்டம்ஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள கஸ்டம்ஸ் கமிஷனர் ஆபிஸில் தொடுதிரை கம்யூட்டர் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. கஸ்டம்ஸ் கூடுதல் கமிஷனர் குமரேஷ் வரவேற்றார். கஸ்டம்ஸ் கமிஷனர் ராஜேந்திரன் தொடுதிரை கம்யூட்டர் இயந்திர சேவையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசும் போது, கஸ்டம்ஸ் சார்பில் கடந்தாண்டு மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. இந்தாண்டு 4 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்ய வேண்டுமானால் வரி செலுத்துபவர்கள் சரியான முறையில் தங்களது வரியினை செலுத்தவும், அதிகாரிகள் கடமை உணர்வுடனும் இருக்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தில் நேர்மையான நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக 2 தொடுதிரை கம்யூட்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பவர்கள் பில் நம்பர், ஷிப்பிங் பில் நம்பர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறியீட்டு எண், கஸ்டம்ஸ் பான் நம்பர் போன்றவற்றை பதிவு செய்துவிட்டு பின்னர் இடத்தினையும் குறிப்பிட்டால் தேவையான அனைத்து விபரங்களையும் உடனே தெரி ந்து கொள்ளலாம். இது தொழில் துறையினருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்திய கஸ்டம்ஸ் சிஸ்டம் உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது.



தூத்துக்குடியில் உள்ள கஸ்டம்ஸ் ஆபிசில் 3 ஆயிரம் இறக்குமதி ஆவணங்கள், 18 ஆயிரத்து 500 ஏற்றுமதி ஆவணங்கள் மாதந்தோறும் கையாளப்பட்டு வருகிறது. 2011-12ம் நிதியாண்டில் தூத்துக்குடி கஸ்டம்ஸ் மூலம் 2 ஆயிரத்து 730 கோடி ரூபாய் வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டினை விட 24.71 சதவீதம் கூடுதல் ஆகும் என்றார். உதவி கமிஷனர் ரகுமான்பஷீர் நன்றி கூறினார். விழாவில் துணை கமிஷனர் ராஜா, உதவி கமிஷனர்கள் ரஜ்சித்குமார், பாரிவள்ளல், கஸ்டம்ஸ் பிஆர்ஓ.,கருணாநிதி, கஸ்டம்ஸ் அலுவலக ஊழியர்கள், கஸ்டம்ஸ் ஏஜென்ட் சங்கத்தினர், ஷிப்பிங் ஏஜெண்ட் சங்கத்தினர், சிஎப்எஸ்., ஆபரேட்டர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us