/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சாத்தை.,யில் ரோட்டை சீரமைக்க கோரிக்கை
/
சாத்தை.,யில் ரோட்டை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 01, 2011 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்தான்குளம் : சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள பள்ளங்களை சரி செய்து ரோடு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் இரண்டும் ஒரே வளாகத்தில் உள்ளது.
இங்கு செல்லும் ரோடு உடைந்து பள்ளங்களாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் அதிகளவில் வரும் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டின் பள்ளங்களை சீரமைத்து புதிய ரோடு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.