/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மாணவர்களுடன் கலந்துரையாட வரும் 5ம் தேதி அப்துல் கலாம் வருகை
/
மாணவர்களுடன் கலந்துரையாட வரும் 5ம் தேதி அப்துல் கலாம் வருகை
மாணவர்களுடன் கலந்துரையாட வரும் 5ம் தேதி அப்துல் கலாம் வருகை
மாணவர்களுடன் கலந்துரையாட வரும் 5ம் தேதி அப்துல் கலாம் வருகை
ADDED : ஆக 03, 2011 12:09 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி, கோவில்பட்டி பள்ளிகளில் வரும்5ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
வரும் 5ம் தேதி தூத்துக்குடிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வருகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் கூட்டம் மாலை கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது. போலீஸ் எஸ்.பி நரேந்திரநாயர், டி.ஆர்.ஓ அமிர்தஜோதி, டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குனர் அருண்மணி, பி.ஏ.ஜி தமிழ்செல்வி, சி.இ.ஓ பரிமளா மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வருகை ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் கவனிக்க அனைத்து துறையினருக்கும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு மதியம் தூத்துக்குடிக்கு அப்துல்கலாம் வருகிறார். ஸ்பிக் விருந்தினர் மாளிகையில் அவர் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் மாணவ, மாணவிகளுடன் அப்துல்கலாம் கலந்துரையாடுகிறார். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆங்கிலோ இண்டியன் பள்ளி, சி.பி.எஸ்.சி பள்ளி என்று அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் ஆயிரம் பேர் இதற்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு நெல்லை செல்லும் அப்துல்கலாம் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடக்கும் மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு கோவில்பட்டி வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அங்குள்ள யு.பி மெட்டரிக்குலேஷன் பள்ளியில் ஆயிரம் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். இதற்காக 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.