sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வாக்குச்சாவடி விபரத்தை "லதா' மூலம் அனுப்ப வேண்டும் : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

/

வாக்குச்சாவடி விபரத்தை "லதா' மூலம் அனுப்ப வேண்டும் : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

வாக்குச்சாவடி விபரத்தை "லதா' மூலம் அனுப்ப வேண்டும் : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

வாக்குச்சாவடி விபரத்தை "லதா' மூலம் அனுப்ப வேண்டும் : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு


ADDED : ஆக 11, 2011 02:04 AM

Google News

ADDED : ஆக 11, 2011 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி விபரத்தை 'லதா' என்கிற பாண்ட் மூலம் தான் அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி உட்பட 31 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. 25ம் தேதி புதிய உள்ளாட்சி அமைப்பினர் பதவி ஏற்க வேண்டும். அதற்கு முன்பாக அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வுருகிறது. அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று முதல்வர் ஜெ.,அறிவித்து விட்டார்.



இதற்கிடையில் தேர்தல் ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகள் என்ன முறையில் நடந்து வருகிறது என்பதை அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். தேர்தல் ஆணையத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைத்து மாவட்டத்தில் உள்ள மாநில தேர்தல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் தேர்தலில் எவ்வளவு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி தற்போது எந்த நிலையில் உள்ளது, பள்ளிகளில் புதிய அறை கட்டியிருந்தால் வாக்குச்சாவடி மாறியிருக்கும். அது போன்று ஏதாவது இருக்கிறதா உள்ளிட்ட விபரங்களை சேகரித்து தயார் நிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கடந்த தேர்தலை போன்று இருக்க வேண்டும். மிகுதியாகாமல் பார்த்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தில் இருந்து அறிவுரை வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் சரிபார்க்கும் பணி மாநிலம் முழுவதும் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.



இதற்கிடையில் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்ட தேர்தல் பிரிவு மற்றும் மாநகராட்சி தேர்தல் பிரிவுகளுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று வந்து ள்ளது. அதன்படி உள்ளா ட்சி தேர்தல் சம்பந்தமாக வாக்குச்சாவடி பட்டியல், வாக்காளர் பட்டியல் போன்றவற்றை புதியதாக வழங்கப்பட்டுள்ள பாக்ஸ், பாக்ஸ் ஆக உள்ள படிவங்களில் தேர்தல் வெப்சைட் மூலம் 'லதா' என்கிற பாண் டை மட்டும் யூஸ் செய்து அனுப்ப வேண்டும். வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல், தேர்தல் சம்பந்தமான தகவல்களுக்கு இந்த பாண்ட் மட்டும் யூஸ் செய்ய வேண்டும். வேறு எந்த பாண்டும் யூஸ் பண்ணக் கூடாது. இந்த பாண்டை பயன்படுத்தி வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் விபரத்தை இமெயில் மூலமாக அனுப்புமாறு அனைத்து மாவட்டத்திற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



இதன் அடிப்படையில் லதா பாண்ட் மூலமாக தகவலை அனுப்பும் பணியில் ஒவ்வொரு மாவ ட்ட தேர்தல் பிரிவு அலுவலகமும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க உள்ளாட்சி தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென் னை நீங்கலாக மற்ற மாவட்டத்திற்கு எலக்ஷன் பி.ஏ நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 31 எலக்ஷன் பி.ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 20 பேர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி) எலக்ஷன் பி.ஏவாக நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சுனாமி உள்ளிட்ட துறைகளில் உதவி திட்ட அதிகாரிகளாக பணியாற்றிவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு எலக்ஷன் பி.ஏக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எலக்ஷன் பி.ஏவாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி) லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட எலக்ஷன் பி.ஏவாக ராமநாதபுரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் (சுனாமி) திரவியம் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட எலக்ஷன் பி.ஏவாக அதே மாவட்டத்தில் வீட்டுவசதி மற்றும் சுகாதார உதவி திட்ட அலுவலராக பணியாற்றிய ஹெப்சி லீமா அமலினி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு சாந்தி, ராமநாதபுரத்திற்கு ராஜ்குமார், மதுரைக்கு வரலட்சுமி, புதுக்கோட்டைக்கு முனியாண்டி, சிவகங்கைக்கு சர்புதீன், திண்டுக்கல்லுக்கு வளநாட்டுதுரை, திருச்சிக்கு கோமதிசங்கர், காஞ்சிபுரத்திற்கு நடராஜன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



திருவாரூருக்கு பழனிகுமார், கடலூருக்கு ஸ்நேகலதா, விழுப்புரத்திற்கு வடிவேல், வேலூருக்கு ரமேஷ், திருவண்ணாமலைக்கு மோக ன்ராஜ், நாமக்கல்லிற்கு சுப்பிரமணியன், தர்மபுரிக்கு நல்லம்மாள், திருப்பூருக்கு ராமச்சந்திரன், கோவைக்கு ரங்கநாதன், நீலகிரிக்கு ரங்கசாமி ஆகியோரும் நாகப்பட்டினத்திற்கு நக்கீரன், கரூருக்கு பிரேமாவதி, அரியலூருக்கு நயினார் நாயுடு, தேனிக்கு ராஜசேகரன், சேலத்திற்கு முகமதுஜாபர், ஈரோட்டிற்கு ராஜேந்திரபிரசாத், தஞ்சாவூருக்கு மோகன், பெரம்பலூருக்கு சூரியராஜ் ஆகியோரும், சென்னை டி. ஆர்.டி.ஏ இயக்குநர் அலுவலகத்திற்கு சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தேர்தல் உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். தற்போது அதற்கான தலைமை பதவியான எலக்ஷன் பி.ஏக்களும் நியமிக்கப்பட்டு விட்டதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு தனி விங்காக செயல்பட துவங்கிவிடும். தனி அலுவலகம் இன்னும் ஒரிரு நாளில் கம்ப்யூட்டர், இண்டெர்நெட், பேக்ஸ், ஜெராக்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் செயல்பட துவங்க உள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.










      Dinamalar
      Follow us