sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளின் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு

/

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளின் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளின் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளின் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு


ADDED : ஆக 12, 2011 12:51 AM

Google News

ADDED : ஆக 12, 2011 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

இது சம்பந்தமாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இன்ஜினியர்களுடன் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார் வீடியோகான்பரன்சிங்கில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும், வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு வுழங்குவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெ.,உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி பொறியாளர்கள், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர்களுடன் நேற்று சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் செந்தில்குமார் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை மேற்கொண்டார். தலைமை பொறியாளர் ரகுநாதன் உடனிருந்தார்.



வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்களிடம் ஆணையர் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக நிக்நெட் அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், நிக்நெட் அதிகாரி குமார் மற்றும் பொறியியல் பிரிவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆணையர் செந்தில்குமார் பேசியதாவது; மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் அரசு உறுதியாக இருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் பல சலுகைகளை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ளோருக்கு சில படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவங்களில் உள்ள விபரத்தை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் 2004ல் உள்ள பட்டியல் உள்ளது. அதனை மீண்டும் சரி பார்க்க வேண்டும். அந்த பட்டியலில் கூடுதலாக அந்த பட்டியலில் உள்ள நபர் வசிக்கும் வீடு சொந்த வீடா, வாடகை வீடா, பட்டா இடத்தில் அது உள்ளதா, அதற்கான ஆவணம் அவரிடம் உள்ளதா, புறம்போக்கு இடத்தில் அந்த வீடு உள்ளதாக போன்ற விபரங்களை பார்க்க வேண்டும்.



அதன் பிறகு பட்டா நிலத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இதற்கான செலவு தொகையை மாநகராட்சிக்கு அரசு வழங்கிவிடும். தொடர்ந்து அவருக்கு மாதம், மாதம் குடிநீர் கட்டணம் இலவசமாக வழங்கப்படுமா அல்லது கட்டணம் பெறப்படுமா போன்றவை குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அது சம்பந்தமான கைடுலைன் விரைவில் வரும். இதே போல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்கள் புறம்போக்கு போன்ற இடங்களில் இருந்தாலும் அந்த இடங்களுக்கும் தெருக்குழாய் மூலம் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவர்களுக்கு குடிநீர் வழங்க தனியாக பம்பிக் ஸ்டேஷன் தேவைப்பட்டாலோ, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி தேவைப்பட்டாலோ அதனை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us