sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சிபிஎம்., சார்பில் ஆர்ப்பாட்டம்

/

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சிபிஎம்., சார்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சிபிஎம்., சார்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சிபிஎம்., சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 12, 2011 12:51 AM

Google News

ADDED : ஆக 12, 2011 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சமவாய்ப்பு வழங்க கோரி சிபிஎம்., சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலங்கையில் சட்டவிரோதமாக ரகசிய முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களை இணைத்து கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சி வழங்க வேண்டும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும், ஆயுத மோதலினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும், இலங்கையில் உண்மையான கூட்டாட்சி முறை செயல்படுத்தபட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம்., தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் ராஜாஜி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்., மாவட்டச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.

மாநகரச் செயலாளர் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஆறுமுகம், முத்து, குமாரவேல், முருகன், பேச்சிமுத்து, கந்தசாமி உட்பட பலர் பேசினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us