/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மண்டல போட்டிக்கு தகுதி
/
நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மண்டல போட்டிக்கு தகுதி
ADDED : செப் 01, 2011 01:53 AM
நாசரேத் : நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி விளையாட்டில் மண்டல போட்டிக்கு தகுதி பெற்றது.
தூத்துக்குடி கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்தது. அதில் 14,17,19 வயதிற்குட்பட்டோருக்கான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்று மண்டல அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களை, பள்ளி தாளாளர் இம்மானுவேல் ஜாண்சன், தலைமையாசிரியர் ஜோசப் ஜெபராஜ், ஹாக்கி பயிற்சியாளர் ரோஸ் பாத்திமா, உடற்கல்வி இயக்குநர் ஜூலியன் சாம்நாயகம், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஞானசேகர், தேவாசீர்வாதம் கருணாநிதி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் பாராட்டினர்.