/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சிலம்பாட்ட போட்டி: கே.ஜி.எஸ்.பள்ளி சாதனை
/
சிலம்பாட்ட போட்டி: கே.ஜி.எஸ்.பள்ளி சாதனை
ADDED : செப் 01, 2011 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவைகுண்டம் : மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கே.ஜி.எஸ்.பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்த போட்டிகளில் 25 முதல் 30 கிலோ எடை பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் சுபகமலநாதன் முதல் இடமும், 40 முதல் 45 கிலோ எடை பிரிவில் 9வது வகுப்பு மாணவர் சுபசபரிநாதன் 3வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பள்ளி செயலர் சண்முகநாதன், தலைமையாசிரியர் முத்துசிவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகசெல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.