/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முத்துமாலை அம்மன் கோயில் கொடைவிழா கோலாகலம்
/
முத்துமாலை அம்மன் கோயில் கொடைவிழா கோலாகலம்
ADDED : செப் 01, 2011 02:03 AM
ஏரல் : சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா கோலாகலமாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று கொடை விழா நடக்கிறது. இந்த ஆண்டு கொடைவிழா கடந்த 30ம் தேதி நடந்தது. கொடை விழா அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்னதானம், இரவு 9 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறுசுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வாணம், மத்தாப்பு, வேடிக்கை சிறப்பு சிங்காரி மேளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. கொடை விழாவில் சிறுத்தொண்ட நல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். நேற்று (31ம் தேதி) காலை 8மணிக்கு உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜையும், இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. கொடை விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.