/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குரும்பூர் அருகே திடீர் தீ விபத்து :34 வீடுகள் எரிந்து சாம்பல்
/
குரும்பூர் அருகே திடீர் தீ விபத்து :34 வீடுகள் எரிந்து சாம்பல்
குரும்பூர் அருகே திடீர் தீ விபத்து :34 வீடுகள் எரிந்து சாம்பல்
குரும்பூர் அருகே திடீர் தீ விபத்து :34 வீடுகள் எரிந்து சாம்பல்
ADDED : செப் 01, 2011 11:53 PM
குரும்பூர் : குரும்பூர் அருகேயுள்ள குரங்கன்தட்டு கிராமத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 34 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியது.
விபத்து குறித்து தகவல் கொடுத்தும் காலதாமதமாக வந்த தீயணைப்பு துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; குரும்பூர் அருகேயுள்ள குரங்கன்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாசமி.இவரது மனைவி முனியம்மாள்(45) நேற்று இரவு வீட்டில் விளக்கேற்றியுள்ளார். அப்போது பலமாக காற்றுவீசியதால் விளக்கு கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது.உடனடியாக தீயை அணைக்க முயற்சிசெய்துள்ளார். அதற்குள் தீ பரவ ஆரம்பித்தது. இதனால் வீட்டை விட்டு வெளி யே ஓடிவந்த அவர் தீயை அணைக்க அக்கம்பக்கத்தில் உள்ளவரை அழைத்துள்ளார். அதற்குள் அருகில் உள்ள வீரபாண்டியன் என்பவரின் வீட்டிற்கு தீ பரவியது. அங்கிருந்த கேஸ் சிலிண்டரில் தீ பிடித்தவுடன் சிலிண்டர் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்ட உடன் அருகில் இருந்த மற்ற வீட்டுக்காரர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்தனர். அதற்குள் அருகிலிருந்த மற்ற வீடுகளுக்கும் தீ மளமளவென்று பரவியது. காற்றும் பலமாக வீசியதால் தீயை அணைக்க பொதுமக்களால் முடியவில்லை. உடனடியாக பொதுமக்கள் சிலர் திருச்செந்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கொடுத்து அரை மணிநேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறையினர் வராததால் பொதுமக்களே போராடி ஒருவழியாக தீயணைத்துள்ளனர். பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்துக்கொண்டிருக்கும்போது திருச்செந்தூர் தீயணைப்பு துறையினரும் மற்றும் சாகுபுரம் டிசிடபிள்யூ தொழிற்சாலையை சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் வந்து தீயணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 34 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. ரூபாய் பலலட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இதற்கிடையில் தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வராத தீயணைப்பு துறையை கண்டித்து திருநெல்வேலி, திருச்செந்தூர் ரோட்டில் மரங்களை வெட்டிபோட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர். தீ விபத்துகுறித்தும்,பொதுமக்கள் மறியல் குறித்தும் தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் குரும்பூர் இன்ஸ்பெக்டர் பட்டாணி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் திருச்செந்தூர்-திருநெல்வேலி ரோட்டில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விப த்து குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விச õரணை நடத்திவருகின்றனர்.