/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் தமமுக., ஆர்ப்பாட்டம்
/
கோவில்பட்டியில் தமமுக., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 01, 2011 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி ஆர்டிஓ., அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வாசன் தலைமை வகித்தார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதுடன், பலர் பேசினர். கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.