sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வாக்குச்சாவடி பட்டியல் தமிழகம் முழுவதும் செப்.,8ம் தேதி வெளியீடு

/

வாக்குச்சாவடி பட்டியல் தமிழகம் முழுவதும் செப்.,8ம் தேதி வெளியீடு

வாக்குச்சாவடி பட்டியல் தமிழகம் முழுவதும் செப்.,8ம் தேதி வெளியீடு

வாக்குச்சாவடி பட்டியல் தமிழகம் முழுவதும் செப்.,8ம் தேதி வெளியீடு


ADDED : செப் 03, 2011 11:19 PM

Google News

ADDED : செப் 03, 2011 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்குரிய வாக்குச்சாவடி பட்டியலை வரும் 8ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 228 வாக்குச்சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் அதற்கான வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையம் மூலம் பெறப்பட்டு அவை ஒவ்வொரு மாவட்டத்திலும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதோடு வாக்குச்சாவடிகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்குரிய வாக்குச்சாவடி பட்டியலை வரும் 8ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை அனைத்து மாவட்டங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்கும் முன்னேற்பாடு பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆலோசனையின் பேரில் எலக்ஷன் பி.ஏ லோகநாதன் தலைமையில் சிரஸ்தார் பழனி, தேர்தல் தாசில்தார் லட்சுமணன், தேர்தல் பிரிவு மாசாணம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கு சுமார் 2 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 228 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி, 12 பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் வாக்குச்சாவடி பட்டியல்கள் வரும் 8ம் தேதி பொதுமக்கள் பார்த்து கொள்ளலாம். அதன் பிறகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குச்சாவடி பட்டியல் விபரம் அளிக்கப்படுகிறது.அந்த பட்டியலை பெற்ற பிறகு அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தால் அது குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்வர். அந்த விசாரணையில் மாற்றம் தேவைப்பட்டால் மட்டும் வாக்குச்சாவடி மாற்றம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து வரும் 15ம் தேதிக்கு முன்பாக வாக்காளர் பட்டியலும் மக்கள் பார்வைக்கு வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.










      Dinamalar
      Follow us