/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கல்வித்துறை வரலாற்றில் புதுமை திட்டம் : தலைமையாசிரியர் கையில் தவழப்போகிறது பொக்கிஷம்
/
கல்வித்துறை வரலாற்றில் புதுமை திட்டம் : தலைமையாசிரியர் கையில் தவழப்போகிறது பொக்கிஷம்
கல்வித்துறை வரலாற்றில் புதுமை திட்டம் : தலைமையாசிரியர் கையில் தவழப்போகிறது பொக்கிஷம்
கல்வித்துறை வரலாற்றில் புதுமை திட்டம் : தலைமையாசிரியர் கையில் தவழப்போகிறது பொக்கிஷம்
ADDED : செப் 09, 2011 12:52 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை வரலாற்றில் புது முறையாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகளின் அனைத்து விபரங்கள் அடங்கிய முக்கிய கையேடு வழங்க முதன்மை கல்வி அதிகாரி பரிமளா நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேகமாக தயாராகி வரும் இந்த கையேடு மிக விரைவில் வெளியிட உள்ளது. கம்ப்யூட்டர் காலமான இப்போது நொடிப்பொழுதில் ஒவ்வொரு தகவலை அறியும் வகையில் அதி நவீன தொலை தொடர்பு வசதிகள் வந்து விட்டன. அரசுத்துறைகள் அனைத்திலும் இந்த வசதிகளை புகுத்தி உடனுக்குடன் தகவல் பெறும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கம்ப்யூட்டரில் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டு வந்தாலும் எப்போதும் தனது மேஜையில் தலைமையாசிரியர் அனைத்து தகவல் அடங்கிய கையேடு இருந்தால் உடனுக்குடன் எந்த ஒரு தகவலை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்காக புதிய முயற்சியாக எல்லா விபரம் அடங்கிய கையேடு ஒன்று தயாரித்து தலைமையாசிரியர்களுக்கு வழங்க முதன்மை கல்வி அதிகாரி பரிமளா புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரது இந்த புதிய நடவடிகைக்கு உதவியாக நேர்முக உதவியாளர்கள் குமாரதாஸ், ரத்தினம், கண்காணிப்பாளர் முனியப்பன் மற்றும் அலுவலக ஊழியர்கள் இந்த கையேட்டை தயாரிக்கும் பணியில் சுறுசுறுப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. புதிய முயற்சியாக உருவாக உள்ள கையேட்டில் இடம் பெற உள்ள தகவல்கள் குறித்து சி.இ.ஓ அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது; பள்ளி கண்ணாடி என்று அழைக்கும் வகையில் அø னத்து விபரங்களும் இந்த கையேட்டில் இடம் பெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இந்த கையேடு வழங்கப்பட உள்ளது. பள்ளிகள் பற்றிய முழு விபரம், எந்த ஆண்டில் துவக்கப்பட்டது, அங்கீகாரம் பெற்ற ஆண்டு, நாள், பள்ளியின் மொத்த அளவு, வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் திட்ட விபரங்கள், பள்ளியில் வேலை செய்யும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முழு விபரம், அவர்கள் பணியில் சேர்ந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு இன்கிரிமென்ட் போட வேண்டிய விபரம் பள்ளி செயல்படும் நாட்கள் மொத்த விபரம், பள்ளிகளுக்கு விடுப்பு விபரம், தேர்வு விபரங்கள், பள்ளியின் தேர்ச்சி விபரங்கள், மாணவர்கள் பற்றிய விபரங்கள், மாவட்ட அளவில் முக்கிய தகவல்கள், மாவட்ட அளவில் அரசு பொது தேர்வில் தேர்ச்சி மற்றும் சாதனை விபரங்கள் உள்ளிட்ட முழுமையான அனைத்து விபரமும் இதில் இடம் பெறுகிறது. இந்த கையேடு கையில் இருந்தால் போதும். பள்ளியில் எந்த தகவலையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இது ஒரு பெரிய பொக்கிஷம். இதன் தயாரிப்பு பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. மிக விரைவில் இதனை வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.