ADDED : செப் 09, 2011 12:52 AM
தூத்துக்குடி : டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.
டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் இறந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இது போன்ற நாசகார செயல்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜாஜி பூங்கா முன்பு நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் செல்வசுந்தர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் நம்பிராஜன், செயலாளர்கள் ராமசுப்பு, நட்டார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், தெற்கு மாவ ட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், வக்கீல் அணியை சேர்ந்த குற்றாலநாதன் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.