/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சாயர்புரம் அருகே 300 ஏக்கர் வாழை தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
/
சாயர்புரம் அருகே 300 ஏக்கர் வாழை தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
சாயர்புரம் அருகே 300 ஏக்கர் வாழை தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
சாயர்புரம் அருகே 300 ஏக்கர் வாழை தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
ADDED : செப் 09, 2011 12:53 AM
சாயர்புரம் : சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளம் பாசன பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300 ஏக்கர் வாழை பயிர்கள் தீயில் எரிந்து நாசமானதால் விவசாயிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் வடகால் பாசன பகுதியில் உள்ளது பேய்க்குளம். இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வாழை மற்றும் நெல் பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை மணக்காடு பகுதியில் மடை எண் 6 ல் உள்ள ஒரு வயலில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இத்தீ மெல்ல மெல்ல அருகில் இருந்த வயல்களுக்கும் பரவி பெருந்தீயாக உருவெடுத்துள்ளது. காட்டு தீ போல் பரவி அங்கிருந்து செடி, கொடி, மரம், மட்டை ஒன்றையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கியுள்ளது. தொடர்ந்து பரவிய தீ அப்பகுதியில் உள்ள ஏராளமான தென்னந்தோப்புகளையும் விட்டு வைக்கவில்லை. இது தவிர குலை தள்ளி வாழைகள் காற்றில் கீழே விழுந்து விடாமல் இருக்க கொடுக்கப்படும் சவுக்கை கம்புகளும் ஏராளமான அளவில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் மடை எண் 6 பாய்மான பகுதியிலிருந்து மடை எண் 7 பாய்மான பகுதி வரை உள்ள சுமார் 300 ஏக்கருக்கும் மேல் வாழை பயிர்களை எரித்து நாசமாக்கியுள்ளது. விவசாயிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் தீயை கட்டுக்குள் கொ ண்டு வர முடியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகி போ னது. பல மாதங்களாக வடகால் பாசன பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது போராடி கொண்டு வந்த தண்ணீரை வயல்களு க்கு பாய்ச்சும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளு க்கு இத்தீ விபத்து பேரிழப் பை ஏற்படுத்தியுள்ளது. என வே தீ விபத்து நடந்த இடத் தை அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளு க்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.