sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அரசு விழா

/

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அரசு விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அரசு விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அரசு விழா


ADDED : செப் 13, 2011 12:14 AM

Google News

ADDED : செப் 13, 2011 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 பயனாளிகளுக்கு வரும் 15ம் தேதி இலவச கிரைண்டர், மிக்சி, பேன் வழங்கப்படுகிறது.

100 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆடு, மாடுகளுக்கு வழங்கும் விழா தனியாக நடக்கிறது. தமிழகத்தில் அரிசி பெறக் கூடிய ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரசு இலவசமாக பேன், மிக்சி, கிரைண்டர் வழங்குகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான விழா வரும் 15ம் தேதி நடக்கிறது. சென்னையில் முதல்வர் ஜெ.,இந்த திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான விழா நடக்கிறது.விழாவை எங்கு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சென்னையில் இருந்து தான் வரவேண்டியிருப்பதால் மற்ற எல்லா ஏற்பாடுகளும் மாவட்டங்களில் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.



விழாவை நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று சிறப்பு அமலாக்கத்திட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 பயனாளிகளுக்கு இலவச கிரைண்டர், மிக்சி, பேன் முதல் நாளில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக மனு அளித்தனர்.முதியோர் உதவித் தொகை, ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு பரிசு போன்றவற்றை கலெக்டர் வழங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி, மக்கள் குறைதீர்க்கும் பிரிவு தனித்துணை ஆட்சியர் லதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



பின்னர் கலெக்டர் ஆஷீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி 1200 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழா தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் நடக்கும். இதற்கான அறிவிப்பு அரசிடம் இருந்து வரும். இந்த விழாவில் இம் மாவட்டத்தில் உள்ள 100 மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆடு, மாடு வழங்கும் விழா மட்டும் தனியாக நடக்கும். நடப்பாண்டில் மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 59 ஆயிரம் பயனாளிகளுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் வழங்கப்பட உள்ளது.நடப்பாண்டில் 13 ஆயிரத்து 611 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இதே போன்று ஒவ்வாரு ஆண்டும் ஒதுக்கீடு அடிப்படையில் பயனாளிகளுக்கு இவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன்களுக்கு சொந்தமான 45 குளங்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு கூடுதல் தண்ணீர் நிற்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

ஒரு சிலர் அரசியல் ஆதாயத்திற்காக இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர். அதனைப்பற்றி பிரச்னை இல்லை. இதுவரை இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் முறையாக திறந்து விட்டுள்ளது.தற்போதைய சூழ்நிலையில் தென்காலில் தண்ணீர் செல்வதற்கே வாய்ப்பு இல்லாமல் இருந்தும் நெல்லை கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் பேசி தென்காலில் 180 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. வடகாலில் 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த அளவிற்கு எந்த ஆண்டும் இல்லாத வகையில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அணையில் தண்ணீர் திறக்கும் விஷயத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.ஸ்ரீவைகுண்டம் அணையில் மணலை எடுப்பதற்கும், அமலைச் செடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தி அணையில் முழுமையான அளவு தண்ணீரை தேக்குவதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஆறரை கோடி ரூபாய் செலவில் தமிழக அரசுக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இதற்கான அனுமதிவரவில்லை. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு இதற்கான விரைவான அனுமதியை பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us