sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்சி சிறையிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் இன்று வெளிவர வாய்ப்பு

/

திருச்சி சிறையிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் இன்று வெளிவர வாய்ப்பு

திருச்சி சிறையிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் இன்று வெளிவர வாய்ப்பு

திருச்சி சிறையிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் இன்று வெளிவர வாய்ப்பு


ADDED : செப் 15, 2011 11:50 PM

Google News

ADDED : செப் 15, 2011 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வுக்கு திருத்தப்பட்ட ஜாமின் உத்தரவை தூத்துக்குடி கோர்ட் வழங்கியது.

இதன்மூலம், இன்று அவர் திருச்சி சிறையிலிருந்து வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை கொலை செய்ய தூண்டியது உள்ளிட்ட மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், 35 நாட்களாக திருச்சி மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இம்மூன்று வழக்குகளிலும் இவருக்கு செப்.,12ம்தேதி தூத்துக்குடி மாவட்ட கோர்ட் 25,000 ரூபாய் மதிப்பிற்கு இருநபர் ஜாமின் வழங்கியது. ஆனால், தி.மு.க., அலுவலகத்திற்கு தீவைக்க தூண்டியதில், பொதுசொத்திற்கு சேதம் விளைவித்த பிரிவில், அவருக்கு ஜாமின் வாங்கப்படவில்லை. இதனால், அவர் சிறையிலிருந்து விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இப்பிரிவிற்கு ஜாமின் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் தனியாக மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரபுதாஸ், திருத்தப்பட்ட ஜாமின் உத்தரவை நேற்று வழங்கினார். அந்த உத்தரவு திருச்செந்தூர் கோர்ட் மூலம், நேற்றே திருச்சி மத்திய சிறைக்கு விரைவு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த உத்தரவு இன்று அங்கு சென்றுசேரும். இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் இன்றே சிறையிலிருந்து வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us