ADDED : ஜூலை 30, 2011 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எட்டயபுரம்:எட்டயபுரம் பாண்டியன் கிராம பாங்க் சார்பில்
குளத்துள்வாய்பட்டி, கசவன்குன்று ஆகிய கிராமங்களை சார்ந்த பால்
உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கடன்
வழங்கப்பட்டது.கிராமப்புரங்களில் பால் உற்பத்தியை பெருக்குவதற்காக
குளத்துள்வாய்பட்டி, கசவன்குன்று ஆகிய கிராமங்களிலுள்ள பால்
உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக 16 பயனாளிகளுக்கு தலா
ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கடன் தொகை வழங்கப்பட்டது.
எட்டயபுரம் பாண்டியன் கிராம பாங்க் மேனேஜர் கார்த்திகேயன் பயனாளிகளுக்கு
கடன் தொகை வழங்கி இதன் மூலம் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
என தெரிவித்தார். பாங்க் அலுவலர் சிவகாமி மற்றும் பால் உற்பத்தியாளர்கள்
கலந்து கொண்டனர்.