/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வெளிமாநிலங்களுக்கு மணல் அனுப்புவதைதடை விதிக்க கோரி காங்.,நூதன போராட்டம்
/
வெளிமாநிலங்களுக்கு மணல் அனுப்புவதைதடை விதிக்க கோரி காங்.,நூதன போராட்டம்
வெளிமாநிலங்களுக்கு மணல் அனுப்புவதைதடை விதிக்க கோரி காங்.,நூதன போராட்டம்
வெளிமாநிலங்களுக்கு மணல் அனுப்புவதைதடை விதிக்க கோரி காங்.,நூதன போராட்டம்
ADDED : ஜூலை 30, 2011 12:55 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதி கட்டுமான பணிக்கான மணல் விலையை குறைத்து,
வெளிமாநிலங்களுக்கு மணல் அனுப்ப தடைவிதிக்கக்கோரி காங்.,சார்பில்
தந்தியனுப்பும் நூதன போராட்டம் நடந்தது.உள்ளூர் தேவைக்கு மட்டும் மணல்
அள்ளவும், வெளிமாநிலத்திற்கு மணல் அனுப்புவதை தடை செய்யவும் வலியுறுத்தி
கோவில்பட்டி நகர காங்.,சார்பில் தமிழக முதல்வருக்கு தந்தியனுப்பும் நூதன
போராட்டம் நடந்தது. கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நகர காங்.,தலைவர்
ராஜகோபால் தலைமையில் நகர துணை தலைவர் பால்ராஜ், மாவட்ட செயலாளர்
முத்துசாமி, பொதுச் செயலாளர் செண்பகராஜ், சட்டசபை இளைஞர் காங்.,தலைவர்
கருப்பசாமி, நகர செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கையை
வலியுறுத்தி 51 தந்திகள் அனுப்பினர். தொடர்ந்து தந்தியனுப்பி முடிந்த
பின்னர் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
இம்மானுவேல், அய்யாத்துரை, நகர துணை தலைவர்கள்
பெரியசாமி, செம்புகுட்டி, பிச்சைமணிக்கொடி, சண்முகவேல், நகர துணை செயலாளர்
சண்முகராஜ், சுப்புராஜ், தங்கதிருப்பதி, மூர்த்தி, செண்பகராஜ்,
முத்துமாரியப்பன், ஆலோசகர்கள் கிருஷ்ணசாமி, கருப்பையா, நிர்வாக குழு
உறுப்பினர்கள் விஜயகுமார், ஆறுமுகச்சாமி, தெய்வநாயகம், ஆரோக்கியம்,
வட்டாரத்துறை ஹரிபாலகிருஷ்ணன், முத்துராமலிங்கம், சட்டசபை பிரதிநிதிகள்
ஜோசுவா, பொன்னுபாண்டியன், வின்சென்ட், நிர்வாகிகள் மதன்ராஜ், மாரிமுத்து,
மைக்கேல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கட்டுமானத்துறையை சேர்ந்த இன்ஜினியர்கள் மற்றும் சர்வேயர்கள்
சங்கத்தின் சார்பிலும் மணல் விலையை குறைக்க வலியுறுத்தி சங்கத் தலைவர்
ரகுநாத் தலைமையிலும், செயலாளர் நாராயணசாமி முன்னிலையிலும் சுமார் 18க்கும்
மேற்பட்ட தந்திகளை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பினர். நிகழ்ச்சியில் சங்க
துணைத் தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் சந்தனராஜ், இன்ஜினியர்கள்
ரமேஷ்குமார், தவமணி,சவுந்திரபாண்டியன் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மணல்
குவாரிகளில் நமது மாவட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு மட்டும் மணல் அள்ளவும்,
சிறிய வாகனங்களில் மட்டும் மணல் எடுத்துச் செல்ல அனுமதித்து லாரிகளில்
மணல் அள்ள தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.