sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மார்க்குகளை அள்ளிகுவித்த மாணவிஇன்ஜினியரிங் படிக்கமுடியாமல் தவிப்பு

/

மார்க்குகளை அள்ளிகுவித்த மாணவிஇன்ஜினியரிங் படிக்கமுடியாமல் தவிப்பு

மார்க்குகளை அள்ளிகுவித்த மாணவிஇன்ஜினியரிங் படிக்கமுடியாமல் தவிப்பு

மார்க்குகளை அள்ளிகுவித்த மாணவிஇன்ஜினியரிங் படிக்கமுடியாமல் தவிப்பு


ADDED : ஜூலை 30, 2011 01:05 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: பிளஸ் 2தேர்வில் மார்க்குகளை அள்ளிகுவித்த ஏழை மாணவி இன்ஜினியரிங் படிக்க திறமை இருந்தும் படிக்க வசதியில்லாமல் தவிக்கிறார். ஏழ்மையினால் படிக்க முடியாமல் தவிக்கும் தன்னை யாராவது படிக்கவைக்க மாட்டார்களா என்று எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறார்.கோடி,கோடியாய் பணமிருந்தாலும் ஒரு சிலருக்கு படிப்பு வராது.. ஒருசிலருக்கு வீடே தெருக்கோடிதான். அங்கிருந்து படிக்கும் ஏழை மாணவனாக இருந்தாலும்,சரி மாணவியாக இருந்தாலும் சரி படிப்பில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள். 12ம் வகுப்புவரை அரசு அவர்களை இலவசமாக படிக்கவைத்துவிடும். அதற்குபிறகு கல்விஉதவித்தொகை அரசு வழங்கினாலும் அந்ததொகை என்னவோ கல்லூரி புத்தகங்கள் வாங்கமட்டுமே பயன்படும். அதற்கு பிறகு ஆகும் செலவுகளுக்கு பெற்றோர்கள் படும்பாடு சொல்லிமுடியாது. இதனாலே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகனையும்,மகளையும் படிக்க வைக்கமுடியாமல் தவியாய் தவித்துவருகின்றனர். நன்றாக படித்து எதிர்காலத்தில் சிறந்த ஒரு இன்ஜினியராக, தலைசிறந்த டாக்டராக வரவேண்டும் என்கிற அந்த ஏழை மாணவ,மாணவிகளின் கனவு கடைசிவரை வறுமையின் காரண மாக கானல்நீராகவே இருந்துவிடுகிறது. இதுபோன்றுதிறமை இருந்தும் படிக்கமுடியாமல் தவிக்கும் ஏழை மாணவ,மாணவிகளின் ஒரு சிலரின் கனவை ஒரு சில தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் நனவாக்கிவிடுகின்றனர்.

ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்கும் புண்ணியத்தை விட ஒரு ஏழை மாணவனை, அல்லது ஒரு ஏழை மாணவியை படிக்க வைப்பது பல மடங்கு புண்ணியத்தை தேடிதரும் என்கிறார்கள் சான்றோர்கள். இங்கும் ஒரு ஏழை மாணவி பிளஸ் 2தேர்வில் ஆயிரத்து122 மார்க்குகள் எடுத்தும் இன்ஜினியரிங்க் படிக்க பணவசதி இல்லாமல் தவித்து வருகிறார். சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் சங்கர். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் சண்முகப்பிரியா சாத்தான்குளம் புனித ஜோசப்பள்ளியில் பிளஸ் 2 படித்துதேர்ச்சிபெற்றார். இவர் தமிழ்-192,ஆங்கிலம்-170, பிசிக்ஸ்-188, கெமிஸ்ட்டிரி-192, பயாலஜி-181,கணிதம்-199 மொத்தம் 1122 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இதைப்போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றார். நன்றாக படிக்கும் இந்த ஏழை மாணவிக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் வீட்டில் உள்ள வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாமல் வீட்டில் முடங்கிகிடக்கிறார்.இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது. பல கஷ்டங் களுக்கிடையில் என்னை என் பெற்றோர்கள் பிளஸ் 2வரை படிக்கவைத்துவிட்டனர். ஆனால் இதற்கு பிறகும் என் அப்பாவால் என்னை படிக்க வைக்க முடியாது. எனக்கு எதிர்காலத்தில் ஒரு இன்ஜினி யராக வரவேண்டும் என்கிற ஆசை உண்டு. ஆனால் வறுமையின் காரணமாக அந்த ஆசை நிராசைதான். இருந்தா லும் யாராவது படிக்கவைத்தால் நிச்சயம் படித்து தலைசிறந்த இன்ஜினியராக வருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us