ADDED : ஜூலை 30, 2011 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக்கோரி விடுதலைசிறுத்தைகள்
சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தூத்துக்குடி மாநகர மாவட்ட விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக்கோரி
தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர்
ஆறுமுகநயினார் தலைமை வகித்தார்.மீனவர் மேம்பாட்டு பேராயம் மாநிலச்செயலாளர்
நியூட்டன் பர்னாண்டோ ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். மாநில தொண்டரணி
அமைப்பாளர் முத்தமிழன் ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்தார்.மாநகர மாவட்ட துணை
செயலாளர் சிறுத்தைகுமார், செல்வராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.