sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு

/

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆர்வத்துடன் ஆண்கள், பெண்கள் பங்கேற்பு


ADDED : ஜூலை 31, 2011 01:01 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வு நேற்று நடந்தது.

ஆர்வத்துடன் ஆண், பெண்கள் தேர்வினை எழுதினர். தேர்வினை கண்காணிக்க சிறப்பு பறக்கும்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தேர்வு மையங்களுக்கு திடீர், திடீரென சென்று சோதனை செய்தனர்.வணிகவரி உதவி அலுவலர், வருவாய் உதவி அலுவலர், தலைமை செயலாக்க பிரிவு அலுவலர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட மொத்தம் 6 ஆயிரத்து 695 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 19 மையங்களில் 6 ஆயிரத்து 231 பேரும், திருச்செந்தூரில் 6 மையங்களில் ஆயிரத்து 716 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 3 மையங்களில் 770 பேரும், கோவில்பட்டியில் 9 மையங்களில் 2 ஆயிரத்து 850 பேரும் குரூப் 2 தேர்வினை எழுதினர். மொத்தம் 37 மையங்களில் 11 ஆயிரத்து 567 பேர் ஆர்வமாக குரூப் 2 தேர்வினை எழுதினர். ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வமாக இந்த தேர்வினை எழுத வந்தனர். தேர்வு அறைக்குள் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட அவர்கள் படித்து கொண்டிருந்தனர். தூத்துக்குடியில் தேர்வு நடந்த மையங்களை டி.ஆர்.ஓ அமிர்தஜோதி பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us