sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி வாலிபர் கொலை வழக்கில்தந்தையே மகனை வெட்டிய கொடூரம்

/

தூத்துக்குடி வாலிபர் கொலை வழக்கில்தந்தையே மகனை வெட்டிய கொடூரம்

தூத்துக்குடி வாலிபர் கொலை வழக்கில்தந்தையே மகனை வெட்டிய கொடூரம்

தூத்துக்குடி வாலிபர் கொலை வழக்கில்தந்தையே மகனை வெட்டிய கொடூரம்


ADDED : செப் 07, 2011 02:27 AM

Google News

ADDED : செப் 07, 2011 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த கொலையில் தந்தையே மகனை கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வாலிபரின் தந்தையை கைது செய்தனர்.இது குறித்து போலீஸ் தர ப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி சாமுவேல்புரத் தை சேர்ந்த ஆறுமுகச்சாமி மகன் கருப்பசாமி. இவர் நேற்று முன்தினம் இரவு பூபால்ராயபுரம் 6வது தெருவில் நடந்து சென்றபோது அங்கு மறைந்திருந்த ஆசாமி அவரை சரமாரியாக வாலிபரை வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பீமராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையில் துப்புகிடைத்தது. இதில் தந்தையே பெற்ற மகனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆறுமுகச்சாமி யை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

வாக்குமூலத்தில் எனது சொந்த ஊர் புதூர் பாண்டியாபுரம், தற்போது நான் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு 2 மனைவியினர். இதில் மூத்த மனைவி பேச்சியம்மாள் மகன் தான் கருப்பசாமி. 2வது மனைவி பிச்சமாளுக்கு 3 பெண்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி அடிக்கடி பிச்சம்மாள் மற்றும் அவரது மகள்களிடம் தகராறு செய்து வந்தார். மேலும் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து சொத்தை தனக்கு கொடுக்குமாறு தொல்லை கொடுத்துவந்தார். இதனால் வேறு வழியில்லாமல் கருப்பசாமியை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். இத ன்படி நேற்று முன்தினம் அவரை வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us