/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆறுமுகநேரி கோயிலில் இன்றுஅன்னதான திட்டம் துவக்கம்
/
ஆறுமுகநேரி கோயிலில் இன்றுஅன்னதான திட்டம் துவக்கம்
ADDED : செப் 21, 2011 12:41 AM
ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி சிவன் கோயிலில் இன்று முதல் தினமும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்குகின்றனர்.ஆறுமுகநேரியில் திருவாடுதுறை ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆனி உத்திரத் திருவிழா, நவராத்திரி திருவிழா, சித்திரை விசு. ஐப்பசி விசு, திருக்கல்யாண உற்சவம், பிரதோஷம், மார்கழி திருவாதிரை திருவிழா உட்பட பல விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.இக்கோயில் திருவாவடு துறை ஆதீனத்தைச் சார்ந்தது. திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் உத்தரவுப்படி திருநெல்வேலி பேஷ்கார் திருச்செந்தூர் ஆய்வாளர் குற்றாலிங்கம் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் இன்று முதல் தினமும் 10 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்குகிறது. இத்தகவலை கோயில் மணியம் சுப்பையா, சிவாச்சாரியார் ஐயப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.