/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த இருவர் கைது
/
கோவில்பட்டியில் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த இருவர் கைது
கோவில்பட்டியில் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த இருவர் கைது
கோவில்பட்டியில் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த இருவர் கைது
ADDED : செப் 21, 2011 12:58 AM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்ததாக இருவரை
போலீசார் கைது செய்தனர். மேலும் பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்துகளை
பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி
சண்முகசிகாமணி நகர் முதல் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மனைவி
கிருஷ்ணம்மாள்(32). இவர் முறையான அனுமதியில்லாமல் வீட்டில் வைத்து பட்டாசு
தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு
போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சண்முகசிகாமணி நகரில்
ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது கிருஷ்ணம்மாள் தனது வீட்டருகேயுள்ள
காலியிடத்தில் வைத்து பேப்பர் குழாய் பட்டாசு தயாரிப்பது தெரிய வந்தது.
மேலும் சுமார் 2 போரா சாக்கு அளவிற்கு பட்டாசு தயார் செய்து
வைத்திருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து கிருஷ்ணம்மாளை
போலீசார் கைது செய்தனர். மேலும் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் சப்ளை
செய்ததாக சிவகாசி அருகேயுள்ள பேராப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன்
வேல்மணி(27) என்பவரையும் கைது செய்து இருவரையும் கோவில்பட்டி ஜேஎம்2
கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தவிர பட்டாசு தயாரிக்க பயன்படும்
மூலப்பொருட்களான சுமார் 5 கிலோ கரித்தூள், திரி புகட்டு, லேபிள் 6 கட்டு,
3/4 கி சல்பர் உட்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து
சப்இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.