ADDED : செப் 21, 2011 12:59 AM
செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் ஒருவர் பைக் விபத்தில்
பலியானார்.செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ் மகன்
செல்வகுமார்(40) லாரி உரிமையாளர்.
இவர் சம்பவத்தன்று தனது பைக்கில்
பாளையங்கோட்டை சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பும்
போது செய்துங்கநல்லூர் அருகே கருவேளங் குளக்கரையில் உள்ள ஒரு கல்லின் மேல்
பைக் ஏறியதால் பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம்
அடைந்தார். உடனே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரை பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு
சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி
பாமினி(34) செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ.,அந்தோணி
துரைராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.