/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரயில் முன் பாய்ந்தவர் உயிர் பிழைப்பு
/
ரயில் முன் பாய்ந்தவர் உயிர் பிழைப்பு
ADDED : செப் 21, 2011 01:00 AM
தூத்துக்குடி:கோவில்பட்டியில் ரயில் முன் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய
முயன்ற முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.இது குறித்து போலீஸ்தரப்பில்
கூறப்படுவதாவது; கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நேற்று முன்தினம்
ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக அங்கு வந்த ரயில் முன்பு பாய்ந்தார்.
இதில் அவர் மீது ரயில் மோதியதில் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். இது
குறித்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஜூலியட் தகவல் தெரிவித்தார். மயங்கி
கிடந்த அவரை கிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து
அவசர கிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் அவருக்கு காயம்
ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
உடலில் சில இடங்களில் மட்டும் காயம்
ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ரயில்வே போலீசார் நடத்திய
விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த சுந்தரம் ( 62 ) என்பது தெரியவந்தது.
மேலும் தற்கொலை செய்துகொள்வதற்காக ரயில் முன் பாய்ந்திருப்பதும்
விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ரயில்வே சப்
இன்ஸ்பெக்டர் ஜூலியட் விசாரனை நடத்தி வருகிறார்.