/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கலவரங்கள் வந்தால் தடுப்பது எப்படி?கோவில்பட்டியில் போலீசார் ஒத்திகை
/
கலவரங்கள் வந்தால் தடுப்பது எப்படி?கோவில்பட்டியில் போலீசார் ஒத்திகை
கலவரங்கள் வந்தால் தடுப்பது எப்படி?கோவில்பட்டியில் போலீசார் ஒத்திகை
கலவரங்கள் வந்தால் தடுப்பது எப்படி?கோவில்பட்டியில் போலீசார் ஒத்திகை
ADDED : செப் 21, 2011 01:10 AM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் நடந்த சந்திப்பு
கூட்டத்தில் கலவரங்களை தடுக்கவும், ஒடுக்கவும் குறித்து தூத்துக்குடி
மாவட்ட எஸ்பி., கருத்துக்களை எடுத்து கூறி னார்.கோவில்பட்டி சத்தியபாமா
திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் நடந்த சந்திப்பு கூட்டத்திற்கு
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி.,நரேந்திரநாயர் தலைமை வகித்து பேசினார்.
கோவில்பட்டி டிஎஸ்பி.,சிலம்பரசன் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி.,
சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரச்னைக்குரிய,
சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகளை இனம் கண்டுபிடித்து கைது செய்தது
குறித்து கருத்து பரிமாற்றம் செய்தனர். பின்னர் எஸ்பி.,பேசுகையில் இந்த
சந்திப்பு கூட்டம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கோட்டத்திலும்
நடத்தப்படும் எனவும், இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எப்படி
கையாள்வது மற்றும் கலவரங்கள் வராமல் தடுப்பது, வந்தால் எப்படி கையாள்வது
குறித்து ஒத்திகை மற்றும் கருத்துக்கள் எடுத்து கூறப்படும் என்றும்
கூறினார். முன்னதாக காலையில் கலவர ஒத்திகை தடுப்பு முறை செய்து
காட்டப்பட்டது.