sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கோவில்பட்டியில் சரத்குமார் பிரசாரம்

/

கோவில்பட்டியில் சரத்குமார் பிரசாரம்

கோவில்பட்டியில் சரத்குமார் பிரசாரம்

கோவில்பட்டியில் சரத்குமார் பிரசாரம்


ADDED : அக் 13, 2011 05:27 AM

Google News

ADDED : அக் 13, 2011 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி: மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சமக தலைவர் சரத்குமார் பேசினார்.கோவில்பட்டி நகராட்சி சேர்மன் வேட்பாளர் ஜான்சிராணி உள்பட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அவர் பிரசாரம் செய்து பேசியதாவது, தமிழகத்தில் நடந்து வந்த ஊழல் மற்றும் தன்னலமான ஆட்சியை அகற்றி, நல்லாட்சி அமைந்திட வாக்களித்து அமோக வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி. அதேபோல் உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைந்திட நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய சட்டசபை தேர்தலைப்போல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாக ஜெ., சிந்தித்து பாடுபட்டு வருகிறார். அவர் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றி கொடுத்து வருவதால், அவ்வாக்குறுதிகள் மக்களை சென்றடைய இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென சமக தலைவர் சரத்குமார் பேசினார். அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜ், சமக நகர செயலாளர் பரமசிவம், அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி உள்பட பலர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us