/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி எஸ்.பி., என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்
/
துாத்துக்குடி எஸ்.பி., என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்
ADDED : செப் 24, 2025 08:51 AM

சென்னை : துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
தமிழக காவல் துறையின், 2017ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான ஆல்பர்ட் ஜான், தற்போது துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருகிறார். இவரை, மத்திய உள்துறை அமைச்சகம், அயல் பணியாக, தேசிய புலனாய்வு முகமைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.
அதேபோல, கேரள மாநில காவல் துறையின், 2015ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான இளங்கோ, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள, சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தெலுங்கானா மாநில காவல் துறையின், 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரி ராம ராஜேஸ்வரி, என்.சி.ஆர்.பி., என்ற, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்களை அந்தந்த மாநில அரசுகள், அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.